Breaking News

காஞ்சிபுரத்தில் குழந்தைகள் ஆரம்ப நிலை சிகிச்சை மையம் திறப்பு

காஞ்சிபுரம், டிச.29-

காஞ்சிபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் ஆரம்ப நிலை சிகிச்சை மையத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திருச்சியிலிருந்து காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.



காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.1.13 கோடி மதிப்பில் குழந்தைகள் ஆரம்ப நிலை சிகிச்சை மையம் புதியதாக கட்டி முடிக்கப்பட்டிருந்தது.இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியிலிருந்து காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரத்தில் புதியதாக கட்டப்பட்டிருந்த கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி,எம்எல்ஏ.சி.வி.எம்.பி.எழிலரசன்,மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தனர்.விழாவில் சுகாதாரத்துறை துணை இயக்குநர்(பொறுப்பு)செந்தில் குமார்,மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவர் நித்யாசுகுமார், துணை மேயர் ஆர்.குமரகுருபரன், சுகாதாரத்துறை துணை இயக்குநர் பிரியாராஜ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சிவசண்முக சுந்தரம் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

குத்து விளக்கேற்றி திறந்து வைத்த பின்னர் ஆட்சியர் மா.ஆர்த்தி கூறியது..காஞ்சிபுரம் மாவட்டத்தில் 636 பள்ளிகள்,940 அங்கன்வாடி மையங்கள் உள்ளன.இவற்றில் உள்ள மாணவர்கள்,குழந்தைகளை அவர்கள் இருப்பிடங்களுக்கே சென்று அவர்களுக்கு எதேனும் நோய்கள் இருக்கிறதா எனக் கண்டறிந்து அவர்களை குழந்தைகள் ஆரம்ப நிலை சிகிச்சை மையத்துக்கு அழைத்து வந்து அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்வதற்கென்று தனியாக புதியதாக இக்கட்டிடம் கட்டி முடித்து முதலமைச்சரின் கரங்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

 

🖱விமர்சனம் வரத்தான் செய்யும்... உதயநிதியின் அமைச்சர் பதவி குறித்து ஸ்டாலின் பேச்சு

பள்ளிகள்,அங்கன்வாடி மையங்களில் உள்ள மாணவ,மாணவியர்களை நேரில் சென்று பரிசோதிக்க ஒரு குழுவில் தலா 5 பேர் அடங்கிய 10 குழுக்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் ஆட்சியர் மா.ஆர்த்தி தெரிவித்தார்.

படவிளக்கம்.. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் காணொலிக்காட்சி வாயிலாக புதியதாக திறந்து வைக்கப்பட்ட ரூ.1.13 கோடி மதிப்பிலான புதிய மருத்துவமனைக் கட்டடம்

No comments

Thank you for your comments