எந்த ஒரு பொருளையும் பொதுமக்களை நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் வாங்க கட்டாயப்படுத்தகூடாது - செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு செயலாளர் திரு. ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி,இ.ஆ.ப., ஆகியோர் உலக மாற்றுத்திறனாளி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 62 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.22.80 இலட்சம் கடன் உதவித்தெகை வழங்கி, நியாயவிலைக்கடைகள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கினை ஆய்வு மேற்கொண்டனர்.
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு 62 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.22.80 இலட்சம் கடன் உதவித்தொகையை வழங்கினார்.
பணியின்போது இறந்த 2 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை தொடர்ந்து காஞ்சிபுரம் நகரில் உள்ள M.V.M.P நகர் மற்றும் ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில் அமைந்துள்ள நியாயவிலைகடைகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, கடையில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கு மேற்கொள்ளவேண்டிய பணிகள் மற்றும் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார். அதன் பிறகு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக கிடங்கினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு அங்கு பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களிடம் குறைகள் மற்றும் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா என கேட்டறிந்தார்.
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு செயலாளர் திரு. ஜெ.ராதாகிருஷ்ணன் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் 4,500 நியாயவிலைகடைகள் தரச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 2,000 நியாயவிலைக்கடைகளில் சுவர்களில் அற்புதமான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதுடன், மொத்தம் 2,491 கடைகள் புதுப்பிக்கபட்டுள்ளது. இதேபோல் தமிழகத்தில் உள்ள நியாயவிலைக்கடைகளிலும் அனைத்தும் படிப்படியாக புதுப்பிக்கப்படும் என தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள 11,366 நியாயவிலைக்கடைகள் கூட்டாய்வும், 47,364 கடைகள் ஆய்வும் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களின் இதுவரை 14.86 இலட்சம் பேர் மட்டுமே தங்களுடைய வங்கி எண்ணை குடும்ப அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மீதம் உள்ளவர்களும் வங்கி எண்ணை குடும் அட்டையுடன் இணைக்க வேண்டும் இந்த இணைப்பை செய்வதற்கு யாரையும் கட்டாய படுத்தக்கூடாது.
மேலும் நியாயவிலை கடையில் எந்த ஒரு பொருளையும் பொதுமக்களை நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தகூடாது
கூட்டுறவு வங்கி கடன்கள் ரூ.12 கோடி வழங்க வேண்டும் என அரசால் நிர்ணயக்கப்பட்டு அதில் 11.07 இலட்சம் நபர்களுக்கு ரூ.8,616 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் மட்டும் 2.16 இலட்சம் நபர்களுக்கு ரூ.1,453 கோடி அளவில் விவசாய கடன்கள் வழங்கப்பட்டுள்ளது, 22,416 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.739 கோடி மதிப்பில் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.
அரிசி கடத்தல், உள்ளிட்ட நியாயவிலைக்கடைகளில் தொடர்பான வழக்குகள் 11,545 பதிவு செய்யப்பட்டு அதன்மூலம் 13,628 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 132 பேர் குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு செயலாளர் திரு. ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் / மேலாண்மை இயக்குநர் திரு.மு.முருகன், காஞ்சிபுரம் மண்டல இணை பதிவாளர் திருமதி.பா.ஜெயஸ்ரீ, காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலை மேலாண்மை இயக்குநர் திரு.ஆ.முருகானந்தம், அரசு அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.




No comments
Thank you for your comments