Breaking News

பிரபல ரவுடி போல செல்போனில் பேசி நெல் மண்டி வியாபாரியிடம் பணம் பறிக்க முயன்ற வழக்கில் மூன்று பேர் கைது

காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடி போல செல்போனில்  பேசி நெல் மண்டி வியாபாரியிடம் பணம் பறிக்க முயன்ற வழக்கில் செந்தில்குமார், அருண்,மோகன்  ஆகிய 3 பேரை போலீசார்  கைது செய்து உள்ளனர். மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி பிரபா தலை மறைவான நிலையில் சிவகாஞ்சி போலீசார் தேடும் பணியில் தீவிரமாகியுள்ளனர்.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு கொலை, கொலை முயற்சி, வழிப்பறி,ஆள் கடத்தல், உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய காஞ்சிபுரம் பொய்யா குளம் பகுதியைச் சேர்ந்த ரவுடி தியாகு, போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் பல்லவர் மேடு பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான பிரபா கூறியதாக சொல்லி ரவுடி தியாகு செல் போனில் பல்லவர் மேடு பகுதியைச் சேர்ந்த நெல் மண்டி வியாபாரி தியாகு என்பவரிடம் ஒரு லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டி உள்ளார்.

பணம் கேட்டு மிரட்டுவது குறித்து நெல் மண்டி வியாபாரி தியாகு, சிவகாஞ்சி போலீசாரிடம் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் 2 தனிப் படைகள் அமைத்து செல்போனில் மிரட்டிய நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

சிவகாஞ்சி போலீசார் செல்போன் சிக்னலை வைத்து  தீவிர தேடலுக்கு பின்னர்   சரித்திரப்பதிவேடு குற்றவாளியான பிரபாவின் கோயம்புத்தூர் நண்பர்கள் ஆன செந்தில் குமார், மோகன்,அருண் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

மேலும்  ரவுடி தியாகுவின் பெயரை பயன்படுத்தி பணம் கேட்டு மிரட்டுவதற்கு முளையாக செயல்பட்ட முக்கிய நபரான பிரபாவை சிவகாஞ்சி  போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

No comments

Thank you for your comments