தமிழக வாழ்வுரிமை கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்
விருத்தாசலம் தனியார் மண்டபத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது
விருத்தாசலம் தனியார் மண்டபத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது மாவட்ட செயலாளர் அறிவழகன் வரவேற்பு உரையாற்றினார் இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவரும்,பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்
🖱 அமைச்சர் உதயநிதிக்கு எந்த துறை சரியாக இருக்கும்...? - யோசனை கூறிய அண்ணாமலை
தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு வடநாட்டவர்க்கு தாரை பார்க்கும் நடவடிக்கையை கண்டித்தும், என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட இருக்கிற மக்களின் நியாயமான வேலை வாய்ப்பு மற்றும் நஷ்ட ஈடு உரிமையை வலியுறுத்தி பேசியதோடு
வருகிற 26 ஆம் தேதி நடைபெற இருக்கும் என்எல்சிக்கு எதிரான பேரணி ஆர்ப்பாட்டத்திற்கு திமுக கூட்டணி கட்சிகள் ஆன விடுதலை சிறுத்தைகள் மதிமுக கம்யூனிஸ்டுகள் மனிதநேய மக்கள் கட்சி காங்கிரஸ் மற்றும் தாவாக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்வதால்பெருமளவில் மக்களை திரட்டிஅழைத்து வந்து போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டுமென கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்
கூட்டத்தின் தீர்மானமாக என்.எல்.சி. நிறுவனம் வீடு நிலம் கொடுத்தவர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு ஏக்கர் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாயும் கொடுக்க வேண்டும் இல்லையேல் ஒருபிடி மண்ணையும் கொடுக்க மாட்டோம்
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணிகளில் தமிழர்களுக்கே 90 சதவீதமும் மாநில அரசு பணிகளில் 100% பணிகளையும் வழங்க வேண்டும் எனவும்,
விருத்தாசலத்தி மையமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்கிட வேண்டும் விருத்தாசலம் மணிமுத்தா நதியை தூய்மைப்படுத்துவதோடுஆற்றில் மருத்துவ கழிவுகளை கொட்டுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் தாலுகா காவனூர் கள்ளிப்பாடி இடையே உள்ள வெள்ளாற்றின் குறுக்கேஉயர்மட்டமேம்பாலம் அமைத்து தர வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியும்
பெண்ணாடம் சர்க்கரை ஆலயம் அம்பிகா சுகர் ஆருரான் சுகர்ஸ் ஆலைகளுக்குசுமார் 25000 விவசாயிகள் கடந்த ஐந்தாண்டுகளாக வெட்டி அனுப்பிய கரும்புக்கு பணம் கிடைக்காமல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் இதன் நிறுவனர்திவால் ஆகிவிட்டதாக நோட்டீஸ் கொடுத்துள்ள நிலையில் விவசாயிகளுக்கு பணம் கிடைப்பது அரிதாக உள்ளது இதனை அரசு கவனத்தில் எடுத்து இந்த பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழு கரும்பு தொகை சுமார் 75 கோடியை அரசே தர வேண்டும் எனவும் இந்த சர்க்கரைஆலைகளைஅரசே எடுத்து நடத்த வேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டது
இந்த செயற்குழு கூட்டத்தில் கடலூர் மேற்கு மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments