திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் வி.சோம சுந்தரம் தலைமையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்தி சாலையில் உள்ள பெரியார் தூண் அருகே திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு,மின் கட்டண உயர்வு,பால் உயர்வு உள்ளிட்டவைகளை கண்டித்து அதிமுகவின் தலைமை கழக அறிவிப்பின் படி காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக,காஞ்சிபுரம் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு பகுதி கழக அதிமுக சார்பில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்தி ரோடு பெரியார் தூண் அருகே முன்னாள் அமைச்சர் வி.சோம சுந்தரம் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.
🖱 அமைச்சர் உதயநிதிக்கு எந்த துறை சரியாக இருக்கும்...? - யோசனை கூறிய அண்ணாமலை
இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளர்கள் வாலாஜாபாத் பா கணேசன், மைதிலி திருநாவுக்கரசு,மாநில எம்.ஜி.ஆர் மன்ற இளைஞரணி செயலாளர் எஸ்.எஸ்.ஆர்.சத்யா, மாவட்ட மாணவரணி செயலாளர் திலக்குமார்,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ் சோமசுந்தரம்,ஒன்றிய செயலாளர்கள் தும்பவனம் ஜீவானந்தம்,களக்காட்டூர் ராஜூ,மாநகராட்சி பகுதி கழக செயலாளர்கள் பாலாஜி,என்.பி ஸ்டாலின் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட மாவட்ட,ஒன்றிய,மாநகர பகுதி கழக அதிமுக நிர்வாகிகள்,தொண்டர்கள் கலந்து கொண்டு திமுக ஆட்சியின் சொத்து வரி உயர்வு ,மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு , விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவைகளை கண்டித்து கைகளில் பதாகைகளை ஏந்திக்கொண்டு,திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


No comments
Thank you for your comments