Breaking News

சுயதொழில் கடன் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில்,  இன்று (21.12.2022)  தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் சுயதொழில் கடன் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில்,  இன்று (21.12.2022)  தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் சுயதொழில் கடன் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தி வரும் சுய தொழில் கடனுதவி திட்டங்களின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.84.25 லட்சம் மதிப்பிலான கடனுதவி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.

மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP), புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் மேம்பாட்டுத் திட்டம் (NEEDS),  பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) மற்றும் வேளாண் உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்கள் தொடங்க பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைபடுத்தும் திட்டம் (PMFME) ஆகிய திட்டங்கள் குறித்தும்  மற்றும் தமிழக அரசின் Startup TN தொடர்பான திட்டங்கள் குறித்தும் விரிவான விளக்கவுரைஅளிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட தொழில் மையம், பொது மேலாளர் திரு.வா.ச.வெங்கடேசன்,  தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின்(TANSIM) துணை தலைவர் திரு.அரவிந்த் சுப்பிரமணியன், மாவட்ட தொழில் மையம் உதவி இயக்குநர்  திரு.எஸ்.சுபாஸ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், (இந்தியன் வங்கி) திரு.ஆர்.கார்த்திகேயன், மாவட்ட மேலாளர்  (தாட்கோ) திருமதி.தேவசுந்தரி,  மாவட்ட மேலாண்மை அலுவலர் (TNRT), திரு.தினகரன் மற்றும் பல்வேறு பொறியல் கல்லூரி மாணவர்களும், தொழில் முனைவோர்களும் கலந்துகொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments