அரிவாளால் சரமாரியாக வெட்டியதில்சம்ப இடத்திலேயே மனைவி பரிதாப பலி... கணவன் காவல் நிலையத்தில் சரண்டர்
மதுரை மாவட்டம் மேலூர் 21வது வார்டு பகுதியில் உள்ளது எம்.மலம்பட்டி இங்கு வசிக்கும் முனியாண்டி என்பவது மகன் முனிராஜா (47) மனைவி கலைவாணி (47) மற்றும் 12 வது படிக்கும் தனது மகள் பொன் மணி பாரதி (17) மகன் நரசிம்மன்(5) ஆகி யோருடன் குடியிருந்து வருகிறார்.
முனிராஜா கட்டிட வேலைக்கு சென்று வரும் கூலித் தொழிலாளியாவார், மனைவி கலைவாணி மகளிர் சுய உதவி குழுவின் தலைவியாக இருந்து வந்துள்ளார்.
🖱 நிறைய அமைச்சர்களுக்கு வாய்கோளாறு...
பட்டியலிட்டு பங்கம் செய்த பாஜக அண்ணாமலை
மகளிர் சுய உதவிக் குழு மூலமாக அதிக கடன் பெற்றிருப்பதாகவும்,திருப்பி செலுத்த முடியாத அளவுக்கு சிரமத்துடன் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது,இந்த கடன் தொடர்பாக கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டும் வந்துள்ளது,
கணவனோடு ஏற்பட்ட கோபம் காரணமாக கடந்த ஒருவார காலமாக கலை வாணி தனது மகனுடன் மதுரை சிம்மக்களில் உள்ள தனது தாயார் வீட்டில் இருந்து வந்துள்ளார்,
இந்த நிலையில் மகளிர் குழுவிற்கு பணம் கட்டுவதற்காக மதுரையிலிருந்து மலம்பட்டி க்கு கலைவாணி வந்துள்ளார், மேலும் இன்று கணவன் முனிராஜாவிற்கு பிறந்தநாள் என் பதால் கணவன் மனைவி இருவரும் கோப தாபங்கள் மறந்த நிலையில் நேசத்துடன் தங்களது குலதெய்வம் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் மகிழ்ச்சியோடு வீட்டுக்கு வந்துள்ளனர்,
இந்நிலையில் மதியம் கணவன் மனைவி இருவரும் வீட்டின் தனி அறையில் இருந்த போது மகன் நரசிம்மனை ஏன் உடன் அழைத்து வர வில்லை என்று மனைவியுடன் மீண்டும் முனிராஜா தகராறு செய்ததாக கூறப்படுகிறது.அப்பொழுது சுய உதவி குழு விற்கான பணத்தை கேட்டு வாங்குவதற்காக சிலர் வந்து சென்றததாகவும் கூறப்படுகிறது,
இதனால் கூடுதலாக ஆத்திரமடைந்த முனிராஜா மீண்டும் மேலும் ஆவேசத்துடன் மனைவியோடு சத்தம் போட்டு தகறாறில் ஈடுபட்டுள்ளார்,
அப்போது வீட்டின் உள்ளே இருந்து கலை வாணி அய்யோ என அலறும் சத்தம் கேட்கவே வீட்டின் அருகே இருந்த கலைவாணியின் மாமனார் முனியாண்டி ஓடிச் சென்று பார்த்துள்ளார்.அப்பொழுது மகன் முனி ராஜா கையில் அரிவாளுடன் வீட்டைவிட்டு ஆவேசத்துடன் வெளியில் வந்துள்ளார். அவர்கள் இருந்த அறைக்குச் சென்று பார்த்த போது மருமகள் கலைவாணி அரிவாளால் வெட்டுப்பட்டு கட்டிலில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.அங்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் செவிலியர்கள் கலைவாணியை பரிசோதித்து விட்டு இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்,
இந்நிலையில் மனைவியை வெட்டிய முனிராஜா மேலூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மேலூர் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முனிராஜாவிடம் விசாரணை செய்து வருகின்றனர்.


No comments
Thank you for your comments