Breaking News

30-12-2022 அன்று விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் டிசம்பர் 2022 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும்  நாள் கூட்டம் 30.12.2022 (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் டிசம்பர் 2022 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் 30.12.2022 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது. 

இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம் வல்லுநர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர்.  

🖱 நிறைய அமைச்சர்களுக்கு வாய்கோளாறு... 

பட்டியலிட்டு பங்கம் செய்த பாஜக அண்ணாமலை

ஆகவே, விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிரிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

பி.எம்.கிசான் திட்டத்தில் 13 வது தவணைத் தொகையினை பெறும் பொருட்டு அனைவரும் ekyc மூலம் பி.எம்.கிசான் கணக்கினை புதுப்பிக்க வேண்டும். பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது கைபேசி மூலமாகவோ, தாங்களாகவே ஆதார் எண்ணை கீழ்க்காணும் முறைகளில் உறுதி செய்து கொள்ளலாம். 

ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்கு வரும் ஒரு முறை கடவுச்சொல்லை (one time password) பி.எம்.கிசான் இணையதளத்தில் பதிவு செய்து உறுதி செய்யலாம் அல்லது பொது சேவை மையத்தில் உள்ள கருவியில் பயனாளிகள் தங்கள் விரல் ரேகையை வைத்து பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யலாம். 

உங்களது கைபேசியில் உள்ள இணையதள வசதியை பயன்படுத்தி, http://pmkisan.gov.in எனும் இணையதளத்தில் சென்று ஆதார் e-KYC எனும் பக்கத்திற்கு சென்ற ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.

எனவே, பி.எம்.கிசான் தவணை தொகை பெறும் பயனாளிகள் இதுநாள் வரை ஆதார் எண்ணை உறுதி செய்யாமல் இருந்தால் மேற்காணும் முறைகளில் பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்திடுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக் கொண்டார். 

மேலும், டிசம்பர் மாதம் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் e-KYC பதிவுகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் பி.எம்.கிசான் பயனாளிகளாக இருப்பின் ஆதார் அட்டை எண்ணுடன் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments