மிகப்பெரிய பேனர்கள் மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் அகற்றம்
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள மிகப்பெரிய பேனர்கள் மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் அகற்றம்.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் புயலானது கரையை கடக்கும் நேரத்தில் பலத்த சூறைக்காற்று வீசும் எனவும் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட வள்ளல் பச்சையப்பன் தெரு, சாலை தெரு, ஒலி முகமது பேட்டை, இரட்டை மண்டபம் சிக்னல் ஆகிய பகுதிகளிலுள்ள உயர் கட்டிடங்களின் மேலே உள்ள மிகப்பெரிய பேனர்கள் காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் அகற்றப்பட்டது.
.jpg)
.jpg)

No comments
Thank you for your comments