குண்டர் சட்டத்தில் இன்று 7 நபர்கள் கைது
திருவள்ளூர் மாவட்டத்தில் போதை பொருளான கஞ்சா விற்பனை செய்த வழக்கில் தொடர்புடைய ஏழு நபர்களை ஆவடி காவல் ஆணையரகத்தில் Act XIV குண்டர்சட்டம் 1982 சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் இன்று (09.12.2022) அடைக்கப்பட்டனர்.
M4, செங்குன்றம் காவல் நிலைய வழக்கின் குற்றவாளிகளான
1) குடா கிஷோர் குமார் (36), த/பெ பங்காரு ராஜூ, விசாகப்பட்டினம், ஆந்திரப்பிரதேசம்,
2) திப்புரு ரமேஷ் (26), த/பெ திப்புரு பங்காரு ராஜு விசாகப்பட்டினம், ஆந்திரப்பிரதேசம்,
3) அனுகூர் சோமேஷ் குமார் (32) த/பெ சன்னி பாபு, விசாகப்பட்டினம், ஆந்திரப்பிரதேசம்,
4) அங்குரி கொண்ட பாபு (26), த/பெ வெங்கட்ராவ், விசாகப்பட்டினம், ஆந்திரப்பிரதேசம்,
5) பூஜாரி ராஜு பாபு (26), த/பெ பூஜாரி நரசையா, விசாகப்பட்டினம், ஆந்திரப்பிரதேசம்,
6) மாரி ராஜு பாபு (32), த/பெ முகிரி, விசாகப்பட்டினம், ஆந்திரப்பிரதேசம்,
7) பட்டி பிரபாகர் ராவ் (31), த/பெ போஜி பாபு, விசாகப்பட்டினம், ஆந்திரப்பிரதேசம்.
மேலும் குற்றங்களை தடுக்கும் வகையில் மேற்கண்ட ஏழு நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., காவல் ஆணையாளர் ஆவடி காவல் ஆணையரகம் அவர்கள் உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் ஆவடி காவல் ஆணையரகத்தில் இன்று வரை மொத்தம் 184 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்

No comments
Thank you for your comments