Breaking News

குண்டர் தடுப்புச் சட்டத்தில் இருவர் கைது

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம், வாலாஜாபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொலை முயற்சி மற்றும் வன்கொடுமை  வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான சந்தோஷ்(24) த/பெ குமார், காமாட்சி நகர், வையாவூர் கிராமம், 


காஞ்சிபுரம் தாலுக்கா மற்றும் திருப்பெரும்புதூர் உட்கோட்டம், சுங்குவார்சத்திரம் மற்றும் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, திருட்டு மற்றும் அடிதடி வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான  நாகராஜ்(32) த/பெ கிரி, பிள்ளையார்  கோயில் தெரு, பள்ள மொளச்சூர் கிராமம், திருப்பெரும்புதூர் தாலுக்கா 

ஆகியோர்களை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்களின் பரிந்துரையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் Dr.M.ஆர்த்தி, இ.ஆ.ப அவர்கள் மேற்படி எதிரிகளை ஓராண்டு தடுப்பு காவலில் (GOONDAS) வைக்க இன்று(15.12.2022) உத்தரவு பிறப்பித்தார்.

No comments

Thank you for your comments