Breaking News

சோழன் காலத்தில் கட்டப்பட்ட 1071 வருடம் பழமையான நின்று அருளின பெருமாள் உய்யக்கொண்ட ஆழ்வார் களவு... பொன் மாணிக்கவேல்

 காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் 1071  வருடம் தொன்மையான  அருளின பெருமாள் பொய்ய கொண்ட ஆழ்வார் திருக்கோவில் களவு போயி உள்ளது.


கோவில், விக்கிரகங்கள், மணவாள பெருமாள், அனுமன் சிலை உள்ளிட்டவை காணாமல் போனதை கண்டு கொள்ளாத இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள்.

மக்கள் வழிபாட்டில் இருந்த பெருமாள் கோவில் முற்றிலும் களவாடப்பட்டு மண்ணிலிருந்து மறைந்து போன நிகழ்வு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வைணவர்களுக்கும் தலைவர்களாக உள்ள ஜியர்களுக்கும் இன்று வரை தெரியாமல் இருப்பது உண்மையிலேயே வருந்தத்தக்க நிகழ்வு என்று காஞ்சிபுரத்தில்  சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் பேட்டி அளித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் தாலுக்கா கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்ட ஆண்டு பழமையான நின்று அருளின பெருமாள் உய்யக்கொண்ட ஆழ்வார் எனும் பெருமாள் திருக்கோயில் இருந்து உள்ளது.

இந்த  கோவில் கடந்த 1906 ஆம் ஆண்டு ஐரோப்பிய கிறிஸ்தவ கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களால் 115 ஆண்டுகளுக்கு முன்பு காணப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டு இருக்கிறது.

அதன் அடிப்படையில் கோவிந்த வாடி அகரம் கிராமத்தில் இருந்த நின்று அருளின பெருமாள் உய்யக்கொண்ட ஆழ்வார் திருக்கோவில் தற்பொழுது காணாமல் போய் உள்ளது என பாலு செட்டி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் மனுவினை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொன் மாணிக்கவேல்,  சோழர்  பேரரசர்களால் கட்டப்பட்டு வரலாற்று மற்றும் கலாச்சார பொக்கிஷமான கோவில் வரலாற்று மற்றும் கலாச்சார பொக்கிஷமான கல்வெட்டுக்களுடன் கூடிய நின்று அருளின பெருமாள் உய்யக்கொண்ட  ஆழ்வார் கோவில், விக்கிரகங்கள், மணவாள பெருமாள், அனுமன் சிலை உள்ளிட்டவை காணாமல் போனதை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை,

மக்கள் வழிபாட்டில் இருந்த பெருமாள் கோவில் முற்றிலும் களவாடப்பட்டு மண்ணிலிருந்து மறைந்து போன நிகழ்வு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வைணவர்களுக்கும் தலைவர்களாக உள்ள ஜீயர்களுக்கும் இன்று வரை தெரியாமல் இருப்பது உண்மையிலேயே வருந்தத்தக்க நிகழ்வு என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

No comments

Thank you for your comments