Breaking News

அமைச்சரின் கூட்டத்துக்கு வராத அறநிலையத்துறை துறை அதிகாரிகள்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு கூட்ட மையத்தில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் மற்றும் கோரிக்கை மனுக்கள் பெறும் கூட்டம்  செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. 


இக்கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒவ்வொருவராக வந்து கோரிக்கை மனுக்களை வழங்கிய போது அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறநிலை துறை அதிகாரிகள் வருமாறு  ஒலிபெருக்கியில் அழைத்தார். 

அமைச்சரும் ஆட்சியரும் பலமுறை ஒலிபெருக்கியில் அழைத்தும் அறநிலை துறை அதிகாரிகள் யாரும் கூட்டத்துக்கு வரவில்லை. பின்னர் பிற கோரிக்கை மனுக்கள் குறித்து கேட்டு அமைச்சர் தெரிந்து கொண்டார். 

உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பலரும் அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்க கூட்டம் கூட்டமாக வந்து குவிந்த வண்ணம் இருந்தனர். 

பெறப்படும் மனுக்கள் பதிவு செய்யப்பட்டு அவை மூன்று நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசினார். இதேபோல் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அவை 3 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்றும் அமைச்சர் பேசினார்..

No comments

Thank you for your comments