Breaking News

மத்திய அரசு வேலை வாய்ப்பிற்க்கான இலவச பயிற்சி...

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பிற்க்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


மத்திய அரசில் இளநிலை செயலக உதவியாளர்/ கீழ் பிரிவு எழுத்தர்,  டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் கிரேடு ‘அ’ போன்ற பல பணிக்காலியிடங்களுக்கு மத்திய அரசுப்பணி தேர்வாணையம்      (Staff Selection Commission) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இப்பணிகாலியிடங்களுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி பண்ணிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், வயது வரம்பு 01.01.2022 தேதியில் 18 முதல் 27 ஆகும். 

வயது வரம்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினவருக்கு 5 வருடங்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 வருடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் வயது வரம்பில் தளர்வு உண்டு. மொத்த பணிக்காலியிடங்கள்  4,500 (இந்தியா முழுவதும்).  இப்பணிக்காலியிடத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 04.01.2023 ஆகும். 

மேலும் விவரங்கள் அறிந்து கொள்ளவும் விண்ணப்பிக்கவும் https://ssc.nic.in/என்ற இணைதள முகவரியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

🖱 நிறைய அமைச்சர்களுக்கு வாய்கோளாறு... 

பட்டியலிட்டு பங்கம் செய்த பாஜக அண்ணாமலை

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக மேற்காணும் போட்டித்தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் 15.12.2022 அன்று நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்போட்டித் தேர்விற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் இவ்விலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை நகல், போட்டித்தேர்வுக்கு விண்ணப்பித்தமைக்கான சான்று மற்றும் ஆதார் எண்ஆகிய விவரங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்புக்கொண்டு முன்பதிவு செய்து கொள்ளவேண்டும். மேலும்        044-27237124 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இப்பயிற்சி வகுப்புகளில் அரசு பணிக்கு தயாராகி வரும் காஞ்சிபுரம் மாவட்ட வேலை தேடும் இளைஞர்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

  வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments