அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதினால் இன்னும் 50 வருடங்களுக்கு திமுக ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது -அமைச்சர் சி.வெ. கணேசன் பேச்சு
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றதினால் இன்னும் 50 வருடங்களுக்கு தி.மு.க.ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன், பேராசிரியரின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பேசினார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வானொலி திடலில் தி.மு.க கடலூர் மேற்கு மாவட்டம் , நகரதி.மு.க சார்பில் இனமான பேராசிரியரின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம்
கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சருமான சி.வெ.கணேசன் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட துணை செயலாளர் பி.வி.பி முத்துக்குமார், நகர செயலாளர், தண்டபாணி ஆகியோர் வரவேற்ப்புரையாற்றிட நகர மன்ற தலைவர் மருத்துவர் சங்கவி முருகதாஸ், ஒன்றிய செயலார்கள் வேல்முருகன், கனக.கோவிந்தாசாமி, மாவட்ட பொறுப்பாளர்கள் ராமு, டைலர் சிவா, பூக்கடை வெங்கடேசன், நகர மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன்,உரையாற்றியபோது தமிழக முதல்வர் மாநிலத்தில் உள்ள ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகளை வழங்கியுள்ளார்
இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக ஸ்டாலின் அவர்கள் உள்ளதாக பல ஆய்வு கட்டுரைகளை பத்திரிகைகள் வெளியிட்டுள்ளனர் ஆனால் முதல்வர் அவர்கள் தமிழகம் முதன்மை மாநிலமாக மாற்றுவது தனது லட்சியம் என உறுதி அளித்துள்ளார்.
மேலும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக மிக சிறப்பாக பணியாற்றி வந்தார் அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்ததின் மூலம் திமுக இன்னும் 50 வருட காலத்திற்கு அசைக்க முடியாத ஒரே கட்சியாகவும் ஆட்சியையும் தக்க வைக்க ஒரு அச்சாரமாக உள்ளது எனவும் பேசினார்.
அதனைத் தொடர்ந்து தலைமை கழக பேச்சாளர்கள் தக்கோலம் தேவபாலன், திருப்பூர் மனோகர் பாபு, ஆகியோர் சிறப்புரை ஆற்றினர் இதில் திமுக மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மகளிர் அணியினர், தொண்டர்கள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


No comments
Thank you for your comments