Breaking News

காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் பேருந்து நிறுத்த பயணியர் நிழற்குடை கட்டும் பணி.

காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் பேருந்து நிறுத்த பயணியர் நிழற்குடை கட்டும் பணியை  காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன், அடி கல்லை நாட்டி துவக்கி வைத்தார்.


காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 17 வது வட்டம் காமராஜர் வீதியில், காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகில், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதி திட்டத்தின் கீழ்  18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன பேருந்து நிறுத்த பயணிகள் நிழற்குடை கட்டும் பணிக்கான துவக்க விழா நடைபெற்றது.

விழாவில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் முன்னிலையில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்

இராசேந்திர சோழன் வரலாறு - கடல் கடந்த பயணம் 

சிவிஎம்பி.எழிலரசன் கலந்து கொண்டு அடிக்கல்லை நட்டு வைத்து கட்டும் பணியினை துவக்கி வைத்தார்.

துவக்க விழாவில் மாநகராட்சி ஆணையர் கண்ணன், மாநகராட்சி பொறியாளர் கணேசன், திமுக மாவட்ட பொருளாளர் சன் பிராண்டு கே ஆறுமுகம், மாமன்ற உறுப்பினர் சசிகலா கணேஷ், மாநகராட்சி 2வது மண்டல  செயலாளர் திலகர், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments