Breaking News

ஊராட்சி குழு நிதியிலிருந்து மொத்தம் 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு மக்கள் வளர்ச்சி நலப்பணிகளுக்கு பூமி பூஜை

காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு நிதியிலிருந்து மொத்தம் 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு மக்கள் வளர்ச்சி நலப்பணிகளுக்கு பூமி பூஜை செய்ய்யப்பட்டது. இதில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் பங்கேற்றார்.




காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் கிழ்அம்பி ஊராட்சியில் மழைநீர் வடிக்கால் கால்வாய் கட்டும் பணிக்காக மாவட்ட ஊராட்சி குழு நிதியிலிருந்து 15  லட்சம் ரூபாய் மதிப்பில் அடிக்கல் நாட்டப்பட்டு பூமி பூஜை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி  காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் எஸ்.நித்யா சுகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார்,ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி ராஜசேகர், திமுக வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் மாரிமுத்து, ஒன்றிய துணை செயலாளர்கள் இளஞ்செழியன், ரமேஷ்,மாவட்ட பிரதிநிதிகள் பி.என்.ரவி,கருணாகரன், ஒன்றிய கவுன்சிலர் ராம்பிரசாத், கழகத்தினர் ராஜசேகர், பிரகாஷ், கூரம் மேஷாக், விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பவானி, வரதராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.




No comments

Thank you for your comments