இருசக்கர வாகனம் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் 10 வயது சிறுமி பரிதாப பலி
ஸ்ரீபெரும்புதூர் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் 10 வயது சிறுமி பரிதாமாக உயிரிழந்தார்.
சென்னை மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள் தணிகைவேல் நிஷாந்தி தம்பதி. இவர்களது பத்து வயது மகள் மகள் சஷ்திகா. காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்படப்பை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று வழக்கம் போல் பள்ளிகைக்கு தனது தாயுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது கரசங்கால் அருகே வந்தபோது பின்னால் வந்த தனியார் தொழிற்சாலை பேருந்து இரு சக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது.
இதில் நிஷாந்தி, சஷ்திகா இருவரும் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்தனர். பின்னர் அங்கிருந்து பொதுமக்கள் சிறுமியை மீட்டு படப்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் செல்லும் வழியிலேயே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார் விபத்தை ஏற்படுத்திய பேருந்தை பறிமுதல் செய்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விபத்து தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.

No comments
Thank you for your comments