Breaking News

பல்வேறு துறையில் சிறப்பாக பணியாற்றிய தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா

காஞ்சிபுரம் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டம் மற்றும் சைல்டு லைன் 1098 திட்டத்தின்  சார்பில் ஹேண்டின் ஹேண்ட் இந்தியா அலுவலகத்தில் பல்வேறு துறைகளில் தன்னலம் பாராமல் பணியாற்றிய தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழாவும் மற்றும்  சர்வதேச தன்னார்வலர் தின விழா நடைபெற்றது. 


இவ்விழாவிற்கு ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனத்தின்  துணைத் தலைவர் பிரேம் ஆனந்த் தலைமை தாங்கினார். குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் உதவி பொது மேலாளர் மோகனவேல் முன்னிலை வகித்தார். முன்னதாக சைல்ட் லைன் 1098 மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருபாகரன் வரவேற்புரை ஆற்றினார். 

பதவி வரும் போகும் கழகம் தான் நம் அடையாளம்...
நம் உயிர் மூச்சு.....   முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் யசோதரன் மாவட்ட சமூக நல அலுவலர் ரேவதி உதவி பொது மேலாளர் வெங்கட்ராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் குழந்தைகள் கல்வி குழந்தைகள்  பாதுகாப்பு மருத்துவ உதவி மற்றும் சிறந்த சேவைக்கான பாராட்டு சான்றிதழை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகரன் வழங்கி சிறப்புரையாற்றினார். 

இதில் காஞ்சிபுரம் வாலாஜாபாத் உத்திரமேரூர் ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் ஆகிய ஒன்றியங்களில் சிறப்பான முறையில் பணிபுரியும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். முடிவில் முதுநிலைத் திட்ட மேலாளர் ஜான் சுகுமார் நன்றி கூறினார்


கோயில்கள் சிலரின் தனிப்பட்ட சொத்து அல்ல..  
ரூ.3,700 கோடி கோயில் சொத்துகள் மீட்பு.. முதல்வர் பேச்சு!


No comments

Thank you for your comments