காமாட்சிபுரி 51 சக்தி பீட கோவிலில் 20-ம் ஆண்டு உலக சமாதான பெருவிழா
கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் அருகே காமாட்சிபுரி 51 சக்தி பீட கோவிலில் உலக சமாதான தெய்வீக பேரவை சார்பில் 20-ம் ஆண்டு உலக சமாதான பெருவிழா, ஆதீனமாக காமாட்சிபுரி சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
அதனைத் தொடர்ந்து ஓ.பி.எஸ் தெரிவித்ததாவது, இந்த கோவிலுக்கு பலமுறை வருவதாக காமாட்சிபுரி ஆதீனத்திடம் தெரிவித்திருந்தேன் சில சூழ்நிலை காரணமாக என்னால் வர இயலவில்லை ஆனால் ஆனால் கடவுளின் அனுகிரகத்தினால் இன்று சாத்தியமானது. இதனை நான் பாக்கியமாக நினைக்கிறேன்.
உலக சமாதானத்திற்காக தெய்வீக பணியை செய்து வரும் ஒரே ஆதீனம் காமாட்சிபுரி ஆதீனம். சமத்துவம், சமாதானம், ஜாதி, மதம் கடந்து மக்கள் நலனுக்காக அவர் வாழ்ந்து வருகிறார். உலக சக்திகளை ஒரே இடத்தில் உருவாக்கி உலக மக்களுக்கும், பக்தர்களுக்கும் ஆரோக்கியத்தை வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து விவசாயிகளுக்காக போராடி வருகிறார். அவர்களின் துன்பங்களை நீக்க பணியாற்றி வருகிறார் என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து உலக சமாதான விருது ஓபிஎஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் கோவில் சீடர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.




No comments
Thank you for your comments