பதவி வரும் போகும் கழகம் தான் நம் அடையாளம்... நம் உயிர் மூச்சு..... திருமண நிகழ்ச்சியில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு
காஞ்சிபுரம்:
திமுகவின் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர் இல்லத் திருமண விழா சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்றது.முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திருமண விழாவில் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்தார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் திருமண விழாவில் பங்கேற்றனர்.
திருமண நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின்;-
பல்வேறு பணி சுமைக்கு இடையில் நான் திருமண நிகழ்ச்சிக்கு வந்திருப்பதாக சொன்னார்கள். எனக்கு ஏற்படக்கூடிய பணி சுமைகள்,பல்வேறு சிரமங்களுக்கு எனக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தரக்கூடிய வகையில் இது போன்ற திருமண நிகழ்ச்சிகள் தான் அமைகிறது.அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும்,ஆடம்பர நிகழ்ச்சியாக இருந்தாலும் இது போன்ற திருமண நிகழ்ச்சிக்கு ஈடாகாது.
ஹிந்தி ஆதிக்கத்தை எதிர்த்து நின்ற இளைஞர்கள் படை வரிசையில் ஒருவராக விளங்கியவர் சுந்தர் எம்.எல்.ஏ.
பதவி வரும் போகும் கழகம்தான் நம் அடையாளம்,இயக்கம் நம் உயிர் மூச்சு அப்படிப்பட்ட இயக்கத்தை உயிர்மூச்சாக கருதி சுந்தர் போன்றவர்கள் பார்த்து வந்ததால் தான் 10 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் 6 வது முறையாக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி அமைந்திருக்கிறது.
10 ஆண்டு அதிமுக ஆட்சியில் பாழடைந்து போன நிதி நிலைமையை சீர் செய்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். 10 ஆண்டு கால அதிமுக ஆட்சி முழுவதையும் சீரழிவு என்று சொல்ல முடியாது முதல் 6 ஆண்டு சீரழிவு என்றால் கடைசி 4 ஆண்டு தமிழகத்துக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பேரிடர்.அந்த பேரிடரை போர்க்கால அடிப்படையில் சீர் செய்யும் பணியை நம்முடைய அரசு,திராவிட மாடல் அரசு செய்து வருகிறது. மீண்டும் தமிழ்நாடு தலை நிமிர்ந்து நடைபோடுகிறது.
வாரிசு வாரிசு என்று சொல்வார்கள் எங்களுக்கு வாரிசு இருக்கிறது அதனால் கம்பீரமாக வாரிசு என்று சொல்கிறோம் அதுதான் குடும்ப பாசம் இந்த இயக்கத்தை குடும்ப பாசம் உணர்வோடு அண்ணா உருவாக்கி தந்தார் நானும் இளைஞரணியில் இருந்து இப்போது மிகப்பெரிய இடத்திற்கு வந்திருக்கிறேன் என்றார்...
முன்னதாக பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் -
உத்திரமேரூர் என்பது ஊரின் பெயர் அல்ல நாகரிகத்தின் அடையாளம்.எந்த நாகரிகத்திலும் இல்லாத சிறப்பு உத்திரமேரூர் சிற்பத்தின் அடையாளத்திற்கு உண்டு. மக்களால் தேர்ந்தெக்கப்பட்டவன் தான் ஆட்சி வேண்டும் என்று உலகிற்கு காட்டிய ஊர் உத்திரமேரூர்.
திமுகவில் முக்கியமான ஒன்று சீர்த்திருத்த திருமணம்.இயக்கத்தின் ஆரம்ப காலத்தில் இது போன்ற திருமணம் மூலம் தான் கருத்துகளை சொல்ல முடிந்தது. ஏனென்றால் திருமணத்திற்கு தான் பொது மக்கள் வருகுறார்கள், கட்சிக்கு அப்பாற்பட்டவர்கள் வருகிறார்கள்.
திருமண நிகழ்ச்சிகளை எந்த காலத்திலும் முதல்வர் தவறுவதுகிடையாது.ஏனென்றால் பொதுக்கூட்டத்தில் சந்திக்காத மக்களையும், திருமணத்தில் சந்திக்க முடியும்.சீர்த்திருத்த திருமணத்தை திமுகவினர் நடத்துவது நம் கடமை உரிமை என்றார்.
.jpg)


No comments
Thank you for your comments