காஞ்சிபுரத்தில் தமாகா சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
காஞ்சிபுரம்,டிச.28
தமாகாவின் 9 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் தெற்கு மாவட்டக்கிளை சார்பில் புதன்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
காஞ்சிபுரம் சங்கர மடம் அருகே அமைக்கப்பட்டிருந்த பந்தலில் தெற்கு மாவட்ட தமாகாவின் 9 வது ஆண்டு தொடக்க விழா மற்றும் கட்சியின் தலைவரும்,முன்னாள் அமைச்சருமான ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு கட்சியின் மாவட்ட தலைவர் மலையூர்.புருஷோத்தமன் தலைமை வகித்தார்.நகர் தலைவர் சுகுமார் முன்னிலை வகித்தார்.முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும், மாநிலத் துணைத்தலைவருமான இ.எஸ்.எஸ். ராமன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
இவ்விழாவில் 2 பேருக்கு 3 சக்கர சைக்கிள்,4 பேருக்கு சலவைப் பெட்டிகள், பள்ளிக்கு செல்வதற்காக மாணவர் ஒருவருக்கு சைக்கிள், மரக்கன்றுகள் வழங்குதல், நடமாடும் உணவகம் நடத்த தள்ளுவண்டி உள்ளிட்ட ரூ.2லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவில் கட்சியின் நிர்வாகிகள்,தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments