நாளை (29-12-2022) புத்தகத் திருவிழாவில் சுகி.சிவம் கருத்துரை
காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கம் மைதானத்தில், நடைபெறும் புத்தகத் திருவிழாவின் ஏழாம் நாளான (29-12-2022) நாளைய தினம் சிகரங்களை நோக்கி என்ற தலைப்பில் திரு.சுகி.சிவம் அவர்கள் கருத்துரையும், சிறகுகள் பறப்பதற்கானவை என்ற தலைப்பில் கவிஞர். திரு.சுகிர்தராணி அவர்களின் நகைச்சுவை திருவிழாவும், சிந்தனை செய் மனமே என்ற தலைப்பில் நகைச்சுவை நாவலர் திரு.மோகனசுந்தரம் அவர்களின் கருத்துரையும் மற்றும் பள்ளி மாணவ/மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ/மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) இணைந்து, நடத்தும் முதலாவது புத்தக திருவிழா மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கம் மைதானத்தில் கடந்த (23.12.2022) அன்று தொடங்கி வைத்தார்கள்.
இம்மாபெரும் புத்தகத் திருவிழா 23.12.2022 முதல் 02.01.2023 வரை நடைபெறுகின்றது. இப்புத்தக கண்காட்சி நாள்தோறும் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இதில் தென் இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு பதிப்பாளர்கள் மற்றும் புத்தக வெளியீட்டார்கள் கலந்து கொள்ளும் வகையில் 125 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், புத்தகத் திருவிழாவின் ஏழாம் நாளான நாளை (29.12.2022) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பள்ளி மாணவ/மாணவியர்களுக்கிடையேயான போட்டிகள், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பெரிய காஞ்சிபுரம், பி.டி.வி.எஸ். உயர்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம், மகரிஷி பன்னாட்டு உறைவிடப்பள்ளி சந்தவேலூர், செயின்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திருப்பெரும்புதூர், அரசு மேல்நிலைப்பள்ளி பரந்தூர், மாமல்லன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விவேகானந்த மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மற்றும் பச்சையப்பன் மகளிர் கல்லூரி, காஞ்சிபுரம் மாணவ/மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும், “சிகரங்களை நோக்கி” என்ற தலைப்பில் திரு.சுகி.சிவம் அவர்கள் கருத்துரையும், “சிறகுகள் பறப்பதற்கானவை” என்ற தலைப்பில் கவிஞர். திரு.சுகிர்தராணி அவர்களின் நகைச்சுவை திருவிழாவும், “சிந்தனை செய் மனமே” என்ற தலைப்பில் நகைச்சுவை நாவலர் திரு.மோகனசுந்தரம் அவர்களின் கருத்துரையும்நடைபெறுகிறது.
இப்புத்தகத் திருவிழாவில் தினசரி சிறப்பு விருந்தினர்களை கொண்டு பல்வேறு கருத்துரைகள் பள்ளி மாணவ/மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் பட்டிமன்றங்கள் நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் மாணவ/ மாணவியர்கள் ஆர்வத்துடன் அறிவார்ந்த புத்தகங்களை படித்தும் வாங்கியும் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
செய்தி வெளியீடு - செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments