இரும்பு கம்பிகளை திருடிய நபரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து காவல்துறையுடன் ஒப்படைப்பு
விருத்தாச்சலத்தில் இரும்பு கம்பிகளை திருடிய நபரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து காவல்துறையுடன் ஒப்படைத்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் நகரத்துக்கு உட்பட்ட ஆலடி ரோடு பகுதியில் புதிதாக வீடு கட்டும் பணி பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில், இரும்புக் கம்பிகளை 45 வயதுக்கு மிக்க ஒருவர் திருடி செல்வதை, பார்த்த அப்பகுதி பொதுமக்கள், அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரிடம் இருந்த இரும்பு கம்பிகளை பிடுங்கிக் கொண்டு, விருத்தாச்சலம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பெயரில் விரைந்து வந்த, விருத்தாச்சலம் காவல்துறையினர், அந்நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், இரும்பு திருடியவர் சக்தி நகர் பகுதியை சேர்ந்த குருநாதன் மகன் மணிகண்டன் என்பது தெரிய வந்தது, மது குடிப்பதற்கு பணம் இல்லாததால், இரும்பு திருடி குவாட்டர் வாங்குவதற்காக திருடியதாக தெரிய வந்துள்ளது.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பகிர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments
Thank you for your comments