ஊழல் எதிர்ப்பு இயக்க கிளை செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானம் நிறேவற்றம்...
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தனியார் திருமண மண்டபத்தில் ஊழல் எதிர்ப்பு இயக்க கிளை செயற்குழு கூட்டம் ஊழல் எதிர்ப்பு இயக்க கடலூர் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது
இதில் மாவட்ட பொருளாளர் கலிவரதன், விருத்தாசலம் கிளை தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட ஊடகப் பிரிவு செய்தியாளர் காமராஜ், ரமேஷ், சங்கர், கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வெங்கடகிருஷ்ணன்,செயற்குழு செல்வமணி ஆகியோர் கலந்து கொண்டனர்
இதில் விருத்தாசலத்தில் போக்குவரத்துக்கு லாயக்கற்றுள்ள கொளஞ்சியப்பர் கலை கல்லூரி சாலை பழத்தோட்ட சாலை ஆகியவற்றை உடனடியாக சீரமைக்க வேண்டும். மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கடலூர் சாலையில் உள்ள பன்றி இறைச்சி கடை மற்றும் மகளிர் காவல் நிலையம் முன்பு உள்ள சாலையோர உணவு கடைகளை அகற்றிட வேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments
Thank you for your comments