Breaking News

மாண்டஸ் புயல் முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை நேரில் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாண்டஸ் புயல் முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை  மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர் இல. சுப்பிரமணியன், இ.ஆ.ப.,  அவர்கள், கூடுதல் கண்காணிப்பாளர் மற்றும் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் திட்ட இயக்குநர் திரு. டி.என்.ஹரிஹரன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., ஆகியோர் பார்வையிட்டனர்.


மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் மாவட்ட பேரிடர்  அவசரகால கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், வரப்பெற்ற புகார்களின் விவரங்கள் குறித்து,  அங்கு பணிபுரியும் அலுவலரிடம் கேட்டறிந்தனர்.

பின்னர் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை நேரில் சென்று பார்வையிட்டு,  அவர்களிடம் தங்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் நிவாரண பொருள்கள் குறித்து கேட்டறிந்தனர். செவிலிமேட்டில் 42 நபர்களும் மற்றும் கீழம்பியில் 28 நபர்களும் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 46 தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அதில் 1,565 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.புண்ணியகோட்டி,  காஞ்சிபுரம் வட்டாட்சியர் பிரகாஷ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments