கேலோ இந்தியா மாநில அளவிலான விளையாட்டு தேர்வுப் போட்டி அறிவிப்பு
கேலோ இந்தியா மாநில அளவிலான விளையாட்டு தேர்வுப் போட்டியில் கலந்து கொள்ளுமாறு விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக, கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளுக்கு தமிழக அணிகளை தேர்வு செய்து தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பது தொடர்பாக மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி தெரிவிக்கையில்,
கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, கோ-கோ, வாலிபால் போன்ற ஐந்து விளையாட்டுகளுக்கு தேர்வுப் போட்டிகள் கீழ்கண்டவாறு நடைபெறுகிறது.
இத்தேர்வுப் போட்டியில் கலந்து கொள்ள வயது 01.01.2004 அன்று அல்லது அதற்கு பிறகு பிறந்திருக்க வேண்டும். ஆதார் கார்டு நகல், 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், பிறந்த தேதி சான்றிதழ் நகல் போன்றவைகள் தேர்வு நடக்கும் இடத்தில் நேரடியாக சமர்ப்பித்து போட்டியில் கலந்துகொள்ளலாம்.
1. கூடைப்பந்து விளையாட்டிற்கு மாணவ/மாணவிகளுக்கு சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் 14.12.2022 அன்று காலை 07.00 மணிக்கு நடைபெறுகிறது.
2. கால்பந்து விளையாட்டிற்கு (மாணவிகள் மட்டும்) சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் 13.12.2022 அன்று காலை 07.00 மணிக்கு நடைபெறுகிறது.
3. ஹாக்கி விளையாட்டிற்கு (மாணவர்கள் மட்டும்) திருச்சி, அறிஞர் அண்ணா விளையாட்டரங்கத்தில் 13.12.2022 அன்று காலை 7.00 மணிக்கு நடைபெறுகிறது.
4. கோ-கோ விளையாட்டிற்கு (மாணவிகள் மட்டும்) சிவகங்கை, மாவட்ட விளையாட்டரங்கத்தில் 13.12..2022 அன்று காலை 7.00 மணிக்கு நடைபெறுகிறது.
5. வாலிபால் விளையாட்டிற்கு மாணவ/மாணவியர்களுக்கு சென்னை நேரு விளையாட்டரங்கத்தில் 13.12.2022 அன்று காலை 7.00 மணிக்கு நடைபெறுகிறது.
மாநில அளவிலான தேர்வுப் போட்டியில் கலந்து கொள்வதற்கு பயணப்படி/ தினப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை 7401703481 என்ற கைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
எனவே காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மேற்கண்ட விளையாட்டில் ஆர்வமுள்ள பள்ளி, கல்லூரியில்பயிலும் மாணவ/மாணவிகள், வீரர்/வீராங்கனைகள் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments
Thank you for your comments