Breaking News

காஞ்சிபுரத்தில் நிவாரண முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கு மருத்துவ முகாம்

காஞ்சிபுரம்,டிச.9

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தேனம்பாக்கம்,செவிலிமேடு பகுதிகளில் நிவாரண முகாம்களில் தங்கி இருப்பவர்களுக்கு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


காஞ்சிபுரத்தில் கனமழை பெய்யும் என வானிலை மைய அறிவிப்பைத் தொடர்ந்து தேனம்பாக்கம்,வெள்ளாக்குளம் பகுதிகளில் குடிசை வீடுகளில் தங்கியிருந்த இருளர் இன மக்கள் 196 பேர் தேனம்பாக்கம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதே போல செவிலிமேடு அரசு உயர்நிலைப்பள்ளியில் அப்பகுதிகளை சேர்ந்த 55 பேர் உட்பட மொத்தம் 251 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இரு இடங்களிலும் தங்கி இருப்பவர்களுக்கு 3 வேளையும் உணவு மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டது.தேனம்பாக்கம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. 

முகாமை காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ், துணை மேயர் ரா.குமரகுருபரன்,ஆணையாளர் ஜி.கண்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர்கள் சுரேஷ்,எஸ்.சந்துரு,சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ்குமார்,இக்பால்,நகரமைப்பு ஆய்வாளர் ஜெயந்தி ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

 

No comments

Thank you for your comments