Breaking News

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் குறித்து ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில்,  தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்க்கான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சிவருத்ரய்யா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  


தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்கு மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சிவருத்ரய்யா அவர்கள் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்றது.   

இக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் பல்வேறு வயது பிரிவினருக்கு விளையாட்டுப் போட்டிக்கான முக்கியத்துவம் மற்றும் அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவ/மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆண்/பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும் மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என 50  வகையான போட்டிகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்பட உள்ளது.

 

🖱விமர்சனம் வரத்தான் செய்யும்... உதயநிதியின் அமைச்சர் பதவி குறித்து ஸ்டாலின் பேச்சு

போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் விளையாட்டு வீரர்/வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியில் வீரர்களின் குழு மற்றும் தனி நபர்களின் அனைத்து விவரங்களையும் பதிவு செய்து பெருமளவில் மாவட்ட / மாநில போட்டிகளில் பங்கேற்று பயனடையுமாறும், மேலும் விவரம் தெரிந்துகொள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கைப்பேசி எண்.7401703481 எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்த கூட்டத்தில்  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.புண்ணியகோட்டி, காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையாளர். திரு.க.கண்ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு. க.இராமச்சந்திர பிரபு, மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.ரமேஷ், குழு உறுப்பினர்கள், விளையாட்டு வீரர்கள், விளையாட்டு சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments