காஞ்சிபுரத்தில் புத்தக கண்காட்சியை மாவட்ட ஊராட்சி குழுவினர் பார்வையிட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியானது கடந்த டிசம்பர் 22 முதல் ஜனவரி 3ம் தேதி வரை புத்தக திருவிழாவானது நடைபெறுகிறது.
இதனை காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை ஆ.மனோகரன் மற்றும் துணை தலைவர் நித்யா சுகுமார் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்று புத்தகங்களை வாங்கி கண்காட்சியினை கண்டு மகிழ்ந்தனர்.
கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு வெற்றி சான்றிதழ்கள் மற்றும் மெடல்களை தலைவர் படப்பை மனோகரன் மற்றும் துணை தலைவர் நித்யா சுகுமார் ஆகியோர் வழங்கினர்.
இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பத்மா பாபு,ராஜலட்சுமி குஜராஜ், சிவராமன், பொற்கொடி செல்வராஜ், பால்ராஜ், ராமமூர்த்தி, அமுதா செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.




No comments
Thank you for your comments