Breaking News

அரசு பேருந்தை இயக்க முடியாமல் பாதி வழியில் நின்றதால் பயணிகள் அவதி

விருத்தாசலத்தில் கீர் ராடு உடைந்த அரசு பேருந்தை இயக்க முடியாமல் பாதி வழியில் நின்றதால் பயணிகள் அவதி அடைந்தனர்.


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து சேத்தியாதோப்பு செல்லக்கூடிய தடம் எண் 2 அரசு பேருந்து சுமார் 20க்கும் மேற்பட்ட பயணிகலை ஏற்றிக் கொண்டு சேத்தியாதோப்பு நோக்கி சென்று கொண்டிருந்தது அப்போது விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானா அருகே வரும்போது அரசு பேருந்தில் கீர் ராடு உடைந்ததால் பேருந்தை இயக்க முடியாமல் ஓட்டுநர் பேருந்தை ரோட்டிலேயே நிறுத்தி உள்ளார் 

இராசேந்திர சோழன் வரலாறு - கடல் கடந்த பயணம் 

இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பேருந்தை விட்டு இறங்கி செய்வதறியாது திகைத்து நின்றனர் இதனை அடுத்து நடத்துனர் அரசு போக்குவரத்து பணிமனைக்கு தகவல் தெரிவித்துள்ளார் மாற்று அரசு பேருந்து ஏற்பாடு செய்து பயணிகளை நீண்ட நேரத்திற்க்கு பிறகு அனுப்பி வைத்தனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக அரசு பேருந்துகள் சரியான பராமரிப்பு இன்றி பல்வேறு குறைபாடுகளுடன் கவனக்குறைவாக இயக்கப்படுவதால் இதுபோன்று பாதியிலேயே நின்று பயணிகள் அலைகழிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

No comments

Thank you for your comments