Breaking News

ஸ்ரீ நரசிம்மர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அமைச்சர் அன்பரசன்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே பழைய சீவரம் கிராமத்தில் உள்ள மலைக் கோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ  நரசிம்மர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் கலந்து கொண்டார்.



பழமையும் வரலாற்று சிறப்பும் வாய்ந்த ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோவிலில் மகா சம்ப்ரோஷணத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் கடந்த நவம்பர் மாதம் 28ஆம் தேதி தொடங்கியது. 

இதனை தொடர்ந்து பல்வேறு ஹோமங்கள் நடைபெற்று வெள்ளிக்கிழமை காலையில் மகாபூர்ணாபதி தீபாரதனைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து கோயில் பட்டாச்சாரியார்கள் புனித நீர் கலசங்களை சுமந்து கொண்டு ராஜ கோபுரத்திற்கு சென்றதும் மகா சம்ப்ரோஷ்ணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனமும் அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. திருக்கோவிலில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

இராசேந்திர சோழன் வரலாறு - கடல் கடந்த பயணம் 

இக்கும்பாபிஷேக விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க. செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர், வாலாஜாபாத் ஒன்றிய குழுத்தலைவர் திரு. தேவேந்திரன், வாலாஜாபாத் ஒன்றியகுழு துணைத்தலைவர் திரு. சேகர், கோயில் அறங்காவலர் குழு தலைவர் திரு. கோவிந்ததாஸ் புருசோத்தம்தாஸ். அறநிலையத்துறை காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் திருமதி. வான்மதி உதவி ஆணையர்

திரு. முத்து ரத்தினவேலு, கோயில் செயல் அலுவலர்கள் திரு. ந. தியாகராஜன், திரு.ஸ்ரீதர் மற்றும் உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகள் உள்பட திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments