Breaking News

அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஊட்டச் சத்து கண்காட்சி விழா

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்-ல் செயல்பட்டு வரும் அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஊட்டச் சத்து கண்காட்சி விழா 03.12.2022 (சனிக்கிழமை) அன்று காலை 10.15 மணியளவில்  பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஊட்டச் சத்து மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த பல்வேறு ஸ்டால்கள் அமைத்து 


உணவு திருவிழாவில் துரித உணவுகளால் ஏற்படும் தீங்குகள் மற்றும் சத்தான உணவுகளால் ஏற்படும் நன்மை குறித்து விளக்கப்பட்டது. மண் பாண்ட சமையல், தானிய உணவுகள், மாவு சத்து உணவுகள், காய்கறி மற்றும் கீரை உணவு ஆகியவற்றின் அவசியம் குறித்து விளக்கம் அளித்து மண்மணம் மாறா உணவு விருந்தையும் பரிமாறி மாணவர்கள் அசத்திக் காட்டியதை அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்று மகிழ்ந்து பாராட்டினர் .

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஊராட்சி மன்றத் தலைவர்கள்  நத்தாநல்லூர் மணி, பழையசீவரம் மகாலட்சுமி நீலமேகம்,  கீழ்ஒட்டிவாக்கம் மகேந்திரவர்மன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். பள்ளி முதல்வர் தேன்மொழி முன்னிலை வகித்தார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகி சாந்தி அஜய்குமார் செய்திருந்தார். இந்நிகழ்ச்சியை பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்லாயிரக் கணக்கானோர் கண்டுகளித்தனர்.

இராசேந்திர சோழன் வரலாறு - கடல் கடந்த பயணம் 

No comments

Thank you for your comments