Breaking News

நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்... காவலர் மீது அதிவேகமாக மோதிய இருசக்கர வாகனம்

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கூடுவாஞ்சேரி அருகே சாலையை கடக்க முயன்ற காவலர் மீது அதிவேகமாக அந்த இருசக்கர வாகனம் மோதும் நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி தனியார் கல்லூயில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் வெங்கட் (19) இவர் கோவையை சேர்ந்தவர், சென்னை  தாம்பரத்தில் இருந்து பொத்தேரி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போது கூடுவாஞ்சேரியில் சாலையை கடக்க முயன்ற காவலர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது



இந்த விபத்தில்  வெங்கட் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தடைந்தார்.  அதே போல் சாலை கடக்க முயன்ற காவலர் கார்த்திகேயனும் பலத்த காயமடைந்தார் 

உடனே பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் 108  ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த வெங்கட் சூர்யா, கார்திகேயன் ஆகிய மூவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

பின்பு விபத்து குறித்து  தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் 

இந்நிலையில்  காவல் மீது இருசக்கர வாகனம் மோதி எதிர் திசையில்  பறந்து விழும் நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

இராசேந்திர சோழன் வரலாறு - கடல் கடந்த பயணம் 

No comments

Thank you for your comments