பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுக்கடையை அகற்றிக் கோரி மனு
காஞ்சிபுரம்,டிச.19
காஞ்சிபுரம் மாநகரின் மையப்பகுதியில் மேட்டுத்தெருவில் அமைந்துள்ள அரசு மதுக்கடை பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதால் அக்கடையை உடனடியாக அகற்றி உதவிடுமாறு ஜனதா தளம் கட்சியின் மாவட்ட தலைவர் வி.மனோகரன் தலைமையில் அக்கட்சியை சேர்ந்தவர்கள் திங்கள்கிழமை நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யாவை சந்தித்து வி.மனோகரன் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பது..
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.அவ்வாறு இல்லையேல் காஞ்சிபுரம் மாநகரின் மையப்பகுதியில் மேட்டுத்தெருவில் நகரீஸ்வரர் கோயில் அருகில் உள்ள அரசு மதுக்கடையை உடனடியாக அப்புறப் படுத்த வேண்டும்.
இக்கடையால் பொதுமக்களுக்கும்,வாகன ஓட்டிகளுக்கும் பல வகையில் இடையூறாக இருந்து வருகிறது. எனவே இக்கடையை மாநகருக்கு வெளியில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கரும்பு விவசாயிகளுக்கு தங்களின் பங்கு தொகைகளை திருப்பித்தர இயலாத சர்க்கரை ஆலை நிர்வாகம் அத்தொகையினை திருப்பிச் செலுத்த ஆவண செய்ய வேண்டும்,கீழ்க்கதிர்ப்பூரில் புதியதாக கட்டப்பட்டுள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு நகர்ப்பேருந்து இயக்கிட வேண்டும்,
காஞ்சிபுரத்தில் ரயில்வே சாலையை அகலப்படுத்துவதுடன் அங்கும்,காந்தி சாலையிலும் பேருந்து நிறுத்தங்கள் கட்டித்தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவர்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் அளித்துள்ளனர்.
.jpg)

No comments
Thank you for your comments