ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சாலை போடும் நெடுஞ்சாலை துறையை கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்
விருத்தாசலம் பஸ் நிலையம் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சாலை போடும் நெடுஞ்சாலை துறையை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பேருந்து நிலையம் அருகில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஜங்ஷன் சாலையில் நெடுஞ்சாலைத் துறையின் மூலமாக சாலை விரிவாக்கம் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது இந்த பணியானது ஆலடி சாலையில் இருந்து பேருந்து நிலையம் வரை ஆக்கிரமிப்புகளை அகற்றாமலேயே சாலையை விரிவாக்கம் செய்யாமல் சாலையை ஆக்கிரமிப்பு செய்து கட்டியுள்ள கட்டிடங்களை அகற்றாமல் அப்படியே சாலை அமைக்கப்படுவதால் அந்தப் பகுதி மிகவும் குறுகலாக காணப்படுவதுடன் பேருந்துகள் வந்து செல்வதற்கு சிரமத்துக்குள்கிறார்கள் அதனால் விபத்துக்கள் ஏற்படும் நிலையும் உள்ளது எனவே சாலையை ஆக்கிரமித்து கட்டி கட்டிடங்களை அகற்றிவிட்டு சாலையை விரிவாக்கம் செய்து கழிவுநீர் வாய்க்கால் அமைக்க கோரி விருத்தாசலம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்
இந்த ஆர்ப்பாட்டம் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது இதில் மாவட்ட பொறுப்பாளர் ஜெயராமன், மாவட்ட செயலாளர் செல்வராஜ், நாராயணன், வெங்கடேசன், ராமமூர்த்தி, முருகன், பார்த்திபன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாவட்ட ஒன்றிய நகர பாரதிய ஜனதா கட்சியினர் கலந்து கொண்டனர்
🖱 அமைச்சர் உதயநிதிக்கு எந்த துறை சரியாக இருக்கும்...? - யோசனை கூறிய அண்ணாமலை
மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சாலை போட பணியை தொடங்கினால் அதனை தடுத்து நிறுத்தி மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை செய்வோம் என பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் செய்தியாளர்களிடம் கூறினார்.

No comments
Thank you for your comments