Breaking News

பொது மக்களுக்கு போக்குவரத்து துறையினர் விழிப்புணர்வு

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி ஆணையரகத்துக்கு உட்பட்ட பட்டாபிராம் போக்குவரத்து துறையினர் சாலையில் போக்குவரத்தை சரி செய்து தலைக்கவசம் அணியாத நபர்களை கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும் என்று விழிப்புணர்வு மேற்கொண்டனர் 



தலைக்கவசம் உயிர் கவசம் மட்டும் அல்லாமல் குடும்ப கவசம் என்று நினைவில் கொண்டு சாலையில் இருசக்கரம் வாகனம் ஓட்டுவோர் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது குறித்தும் தற்போது தலைக்கவசம் அனியாத வருபவருக்கு அரசு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது 

தலைக்கவசத்தை அணிந்து வந்து குடும்பத்துடன் ஆயிரம் ரூபாய் வைத்துக் கொண்டு சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதும் குறித்தும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு மேற்கொண்டார் போக்குவரத்து ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் இவருடன் உதவி ஆய்வாளர் மற்றும் போக்குவரத்துறையினர் உடன் இருந்தனர் இவர்களுக்கு வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்தனர்

No comments

Thank you for your comments