Breaking News

போதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள்.... விசாரித்த தலைமை காவலர் மீது கொலைவெறி தாக்குதல்

விருத்தாச்சலத்தில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட நான்கு இளைஞர்களை, தட்டி கேட்ட  தலைமை காவலர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதால், காவலரின் தலையில் பலந்த காயம் ஏற்பட்டு மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். 

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் தலைமை காவலர் செல்வராஜ். கடந்த 23 வருடங்களாக, காவல்துறையில் பணிபுரிந்து வரும் இவர், நேற்று இரவு விருத்தாச்சலம் பேருந்து நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

இராசேந்திர சோழன் வரலாறு - கடல் கடந்த பயணம் 

அப்போது அதிக மதுபோதையில், இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு இளைஞர்கள், பொது மக்களுக்கு இடையூறு செய்து கொண்டு,  அச்சுறுத்தம் வகையில், பயங்கர சத்தத்துடன் கூச்சலிட்டுக் கொண்டு, ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளனர்.

அதனைப் பார்த்த தலைமை காவலர் செல்வராஜ், மது போதையில் இருந்த இளைஞர்களை, பொதுமக்களுக்கு ஏன் இடையூறும் செய்யும் வகையில் அச்சுறுத்துகிறீர்கள்  எனக்கூறி விசாரித்துள்ளார்.

அப்போது அதிக மதுபோதையில் இருந்த இளைஞர்கள், தலைமை காவலர் என்றும் பாராமல், கீழே கிடந்த,  உருட்டுக்கட்டை கொண்டு கொடூரமாக தாக்கி உள்ளனர்.

இதனால் தலைமை காவலரின் தலையில் பலந்த காயம் ஏற்பட்டு மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். 

இதனை பார்த்த  பொதுமக்கள், விருதாச்சலம் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கவே, விரைந்து வந்த காவல் துறையினர் தலைமை காவலர் செல்வராஜ் மீட்டு விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவத்தால்  தலைமை காவலர் செல்வராஜ்-யின் தலையில் ஆறு தையல்கள் போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து விருத்தாச்சலம் காவல்துறையினர், மதுபோதையில் இருந்த இளைஞர்களை தேடிய நிலையில் இரண்டு பேர்களை கைது செய்துள்ளனர்.

காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில்,காவலரை தாக்கிய இளைஞர்கள், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெண்ணாகரம் கிராமத்தை சேர்ந்த முனுசாமி மகன் மணி மற்றும் கிருஷ்ணமூர்த்தி மகன் அன்பரசன் என்பதும், நெய்வேலி உள்ள ஐயங்கார் பேக்கரியில் பணிபுரியும் இவர்கள், விருத்தாச்சலத்தில் உள்ள ஐயங்கார் பேக்கரிக்கு வேலைக்காக இருசக்கர வாகனத்தில் வந்ததது தெரிய வந்தது.  அவ்வாறு வருகின்ற போது, நடுரோட்டில் மது போதையில் ரகளையில் ஈடுபட்டு பின்புதான் இச்சம்பவம் அரங்கேறியதாக கூறப்படுகிறது.

மேலும் தப்பி ஓடிய இரண்டு இளைஞர்களை, காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 

பொது மக்களுக்கு பாதுகாப்பு அளித்து வரும் காவல்துறையின கே,  இது போன்ற சம்பவம் அரங்கேறியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்

No comments

Thank you for your comments