கட்டிட கழிவுகளை ராட்சத இயந்திரம் மூலம் அகற்றி வரும் போது, ஆபத்தை உணராமல் கம்பிகளை எடுக்கும் சிறுவர்கள்... உயிர்பலி ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்குமா......? நகராட்சி நிர்வாகம்......?
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் இந்திரா நகர் பகுதியில், நீதிமன்ற உத்தரவின் பேரில், ஆக்கிரமிப்பு செய்த வீடுகளை வருவாய்த்துறையினர் அகற்றி உள்ளனர். வீடுகள் அகற்றிய பின்பு குவிந்திருக்கும் கட்டிடக்கழிவுகளை, நகராட்சி நிர்வாகம், லாரியின் மூலமாக, அகற்றி வருகின்றது.
இந்நிலையில் ராட்சச இயந்திரம் கட்டிடக்கழிவுகளை அள்ளும்போது, அதில் கிடைக்கக்கூடிய கம்பிகளை எடுப்பதற்கு, ஆபத்தை உணராமல், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கம்பி, குறுக்கே ஓடிக்கொண்டு, சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இது போன்று ராட்சத இயந்திரம் வேலை செய்யும் குழிக்குள், இறங்கி கம்பிகளை சேகரிக்கும் பொழுது, விபத்துக்கள் நடந்து, உயிர்பலி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனை நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையினரும் உயிர் சேதங்கள் நடப்பதற்குள், நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,
காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்களும், பொது மக்களுக்கும், கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments
Thank you for your comments