செங்கல்பட்டில் மாட்டிற்கு பிரசவம் பார்க்காமல் திருப்பி அனுப்பிய கால்நடைத்துறை மருத்துவர்கள் - பொதுமக்களே பிரசவம் பார்க்கும் அவலம்
செங்கல்பட்டு :
செங்கல்பட்டு அனுமந்தபுத்தேரி பகுதியை எத்திராஜ் (60) இவர் மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டில் இருந்த ஒரு மாடு சினையுற்று குட்டி ஈன்றும் தருவாயில் இருந்தது. இன்று காலை மாடு கன்று போட முயன்ற நிலையில், கன்று வெளியே வராததால் மாட்டின் உரிமையாளரான எத்திராஜின் மனைவி ஜெயலட்சுமி அருகே இருந்த கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மாட்டிற்கு பிரசவம் பார்த்து உள்ளனர். இதில் குட்டி வயிற்றில் உள்ளே இறந்துவிட்ட நிலையில் பாதியிலேயே சிகிச்சையை நிறுத்தி விட்டு மாட்டை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு ஜெயலட்சுமியிடம் கூறியுள்ளனர். இதனால் செய்வதறியாது திகைத்த ஜெயலட்சுமி தனது மாட்டை வீட்டிற்கு மீண்டும் அழைத்துக் கொண்டு வந்துள்ளார்.
அப்போது மாடு நடக்க முடியாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே சுருண்டு விழுந்துள்ளது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் மாட்டிற்கு ஆபத்தான முறையில் பிரசவம் பார்த்து வரும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மாட்டிற்கு சிகிச்சை அளிக்காமல் பாதியிலேயே திருப்பி அனுப்பிய கால்நடைத்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


No comments
Thank you for your comments