வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 294 மனுக்கள் ... உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட ஆட்சியர்
காஞ்சிபுரம் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் பெற்றுக் கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (05.12.2022) மாவட்ட ஆட்சித்தலைவர்
நம் உயிர் மூச்சு..... முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு
டாக்டர்.மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 294 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பாலின சமத்துவ உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அரசு அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர்.
மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான குண்டு எறிதல் போட்டியில் 15.62மீ எறிந்தும், வட்டு எறிதல் போட்டியில் 50மீ எறிந்தும், இரண்டு போட்டிகளிலும், தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த ரா.இளையபெருமாள் என்ற மாணவனை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாராட்டினார்கள்.
மாற்றுத்திறனாளி தின விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்ட சுமார் 18.00 இலட்சம் மதிப்பிலான 6 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தசைப்பயிற்சி அளிப்பதற்காக நடமாடும் சிகிச்சை பிரிவு வாகனத்தையும், 17 மாற்றுத்திறனாளிகளுக்கு சுமார் 6.80 இலட்சம் மதிப்பிலான மடிக்கணினியையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கோ.சிவருத்ரய்யா, காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.பி.ஸ்ரீதேவி, மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.எஸ்.ரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
.jpg)



No comments
Thank you for your comments