Breaking News

நாய்களைக் கொன்ற தன்னார்வலர்கள் அமைப்பு.. காவல் நிலையத்தில் வழக்கு பதிவு.. பின்னணியில் பதிவு செய்யப்படாத என்ஜிஓ

செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாய்களை கட்டுப்படுத்துவதற்காக, நாய்கள் பிடிக்கப்பட்டு ஆய்வகத்தில் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு மீண்டும் அந்த நாய்கள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு திருப்பி விடப்படும். இவ்வாறு செய்யும் பட்சத்தில் செங்கல்பட்டு நகராட்சி பகுதிகளில், நாய்களின் எண்ணிக்கை கட்டுக்குள் வைத்திருக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


இந்நிலையில்  செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட விலங்கு கருத்தடை சிகிச்சை கூடத்தில் நாய்கள் உயிர் இறப்பு ஏற்பட்டது குறித்து, சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாக பரவத் துவங்கியது.

பதவி வரும் போகும் கழகம் தான் நம் அடையாளம்...
நம் உயிர் மூச்சு.....   முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு

அந்த வீடியோவில் சுமார் 5 நாய்கள் பரிதாபமாக உயிரிழந்திருக்கும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த காட்சிகள் பார்ப்போர் நெஞ்சை பதறும் வகையில் இருந்தது.

இதனை தொடர்ந்து, இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு கவனத்திற்கு வந்தது. சமூக வலைதளத்தை பரவிய வீடியோவில் காஞ்சிபுரம் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர்   ஆய்வு மேற்கொன்டு, முதல்கட்ட விசாரனை அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அவர் நடத்திய விசாரணை விசாரனை அறிக்கையில், Animal Trust of India (NGO) எனும் தன்னார்வ நிறுவனம் இந்திய விலங்கு நலவாரியத்தில் பதிவு செய்யாமல் இயங்கிவந்துள்ளது.

செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட விலங்கு கருத்தடை சிகிச்சை கூடத்தில் , தன்னார்வ நிறுவனம் நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள, தேவையான அடிப்படை வசதிகள் ஏதும் செய்யாமலும், விதிமுறைகளுக்கு முரணாகவும் இயங்கி வந்துள்ளது என தெரியவருகிறது. எனவே விலங்குள் கொடுமை தடுப்புச் சட்டம்  ,1960 பிரிவு 11 (a) ன்படி மற்றும் இந்திய தண்டனை சட்டம் 1860 பிரிவு 428 & 429 ன்படி செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் ,  தன்னார்வ நிறுவனத்தின் மீது முதல் தகவல் அறிக்கை பதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பதவி வரும் போகும் கழகம் தான் நம் அடையாளம்...
நம் உயிர் மூச்சு.....   முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு

இது தொடர்பாக  தன்னார்வ நிறுவனத்தின் பணிகளை செங்கல்பட்டு நகராட்சி நகர் நல அலுவலர் முத்து மேற்பார்வை செய்ய தவறியதனால் அவர் மீதும், மற்றும் செங்கல்பட்டு நகராட்சி துய்மை ஆய்வாளர் பால் டேவிஸ் ஆய்வுபணி மேற்கொள்ளாததால், அவர் மீதும் விளக்கம் கேட்டு துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


கோயில்கள் சிலரின் தனிப்பட்ட சொத்து அல்ல..  
ரூ.3,700 கோடி கோயில் சொத்துகள் மீட்பு.. முதல்வர் பேச்சு!

இந்நிலையில்,  இந்தசம்பவம் தொடர்பாக கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர், காஞ்சிபுரம் மாவட்டம்  விசாரணை அலுவலராக நியமனம் செய்யப்பட்டு விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. பதிவே செய்யப்படாத,  தன்னார்வலர் அமைப்பு எப்படி  செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட ஆய்வுக்கூடத்தில்,  எவ்வாறு அனுமதிக்கப்பட்டனர், அவர்களுக்கு எவ்வாறு அனுமதிக்க வழங்கப்பட்டது என்பது குறித்து சர்ச்சை வடித்துள்ளது

No comments

Thank you for your comments