அரசு பேருந்து கண்ணாடியை பட்டா கத்தியால் உடைத்த 3 பேர் கைது...
காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் பகுதியில் அரசு பேருந்து கண்ணாடியை பட்டா கத்தியை கொண்டு உடைத்த விவகாரத்தில் 3 பேரை கைது செய்தனர். சரித்திர பதிவேடு குற்றவாளி சரா(எ)சரவணனை கைது செய்ய முற்பட்ட போது கோனேரிகுப்பம் ரயில்வே டிராக்கில் தடுக்கி விழுந்ததால் குற்றவாளிக்கு மாவுகட்டு போடபட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான T-87 எண் கொண்ட பேருந்து காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து ஓட்டுநர் சுப்பிரமணி மற்றும் நடத்துனர் சாரங்கன் மற்றும் சில பயணிகளுடன் கண்ணன்தாங்கள் கிராமத்திற்கு செல்லும் வழியில் காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் சந்திப்பு வளைவில் திரும்பிய போது போக்குவரத்து நெரிசலால் நின்றிருக்கிறது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள் பேருந்தினை மடக்கி ஆர்ன் அடித்தால் வழிவிட முடியாத என கேட்டு ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
நம் உயிர் மூச்சு..... முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு
மேலும் ஆத்திரமுற்று மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பட்டாக்கத்தியை கொண்டு பேருந்தின் கண்ணாடி முன் பக்க கண்ணாடி மீது பட்டதால் பேருந்து ஓட்டுநர் அச்சத்திலேயே அதிர்ந்து போனார்.
இதனால் அரசு பேருந்து கண்ணாடி வளையம் போல் ஓட்டை விழுந்ததைக் கண்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் தொமுச நிர்வாகிகள் உடனடியாக அப்பகுதிக்கு வந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் விவரம் கேட்டு அதன் மூலம் சிவ காஞ்சி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் வந்து ஓட்டுநரிடம் நடந்த விவரங்களை கூறி பேருந்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றார்.
சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருந்த நபர்களிடமும்,சிசிடிவி காட்சிகளை கொண்டு சில நபர்களின் அடையாளம் கண்ட காவல்துறையினர் தேடுதல் வேட்டையை தொடங்கியிருந்தனர்.
இந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மூவர் ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்வதும்,பட்டா கத்தியை கொண்டு ஓட்டுநரை வெட்ட முயல்வது,அவர் தப்பவே பேருந்தின் கண்ணாடியில் வெட்டிவிட்டு அசால்ட்டாக செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
காலை வேளையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான பூக்கடை சத்திரம் பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றதும் காலையில் கத்தியுடன் ரவுடிகள் உலா வந்ததும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் சிசிடிவி-யில் பதிவாகியிருந்த பதிவுகளில் குற்றவாளியின் சட்டை அடையாளத்தை கொண்டு அது சரித்திர பதிவேடு குற்றவாளி சரா என்கிற சரவணன் என்பதை உறுதி செய்த போலீசார் அவனை காஞ்சிபுரம் கோனேரிக்குப்பம் அருகே இருப்பதை அறிந்திருக்கின்றனர்.இதனையெடுத்து போலீசார் அங்கு சென்ற போது சரா(எ) சரவணன் ரெயில் தண்டவாளத்தில் ஓட்டம் பிடிக்க போலீசாரும் பின்தொடர்ந்து ஓட சரா(எ)சரவணன் தடுக்கி விழுந்து கையில் எலும்பு முறிவானது ஏற்பட்டிருக்கிறது.இதனையெடுத்து அவனுக்கு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாவு கட்டு போடப்பட்டது.
இதனையெடுத்து அவனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது கூட்டாளிகளின் அடையாளத்தினையும் கண்டு மேலும் இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.இதில் அவர்கள் தான் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தாமலாவார் தெரு பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான சரா என்கிற சரவணன்(24) மற்றும் சரவணன்(21),சிவா ஆகிய மூவர் பிடித்து காவல்நிலையம் அழைத்து வந்து கத்தியை வைத்து கொண்டு வேறு ஏதேனும் குற்ற செயல்களில் ஈடுபட முயன்றனரா என விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் விசாரணை முடிந்துபின் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படவுள்ளனர்.
அரசு பேருந்தின் கண்ணாடியை கண்டமாக்கி ஓட்டுநரிடம் மள்ளுக்கு நின்றவருக்கு மாவு கட்டு போடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

No comments
Thank you for your comments