தடையில்லா மின் விநியோகத்திற்காக நேரு நகர் பகுதியில் 7 மின் வளைய அலகுகள் தொடக்கம்
பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குரோம்பேட்டை பகுதியில் உள்ள நேரு நகர், எம்ஐடி, சங்கர்லால் ஜெயின் தெரு, ராமமூர்த்தி தெரு , ராமச்சந்திரன் ரோடு, பெரியார் சாலை, ராஜராஜேஸ்வரி நகர் மற்றும் சிலப்பதிகாரம் தெரு ஆகிய பகுதிகளில் தடையில்லா மின் விநியோகம் மற்றும் சீரான மின் விநியோகத்திற்காக கடப்பேரி, ராதா நகர் சிட்லபாக்கம் துணை மின் நிலையங்களில் இருந்து இன்டெர் லிங்க் மூலம் மின்விநியோகம் செய்ய ரூ.2 கோடியே 19லட்சம் செலவில் மின்வாரியம் சார்பில் நேரு நகர் பகுதியில் 7மின் வளைய அலகுகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதை பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் மக்கள் தொண்டன் அண்ணன் இ.கருணாநிதி அவர்கள் கலந்துகொண்டு மின் வலைய அலகுகள் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
தாம்பரம் மின்வாரிய செயற்பொறியாளர் அசோகன், பொறியாளர்கள் சிவராமன் ஜேக்கப் ராபர்ட் வில்சன், மாமன்ற உறுப்பினர்கள் மகாலட்சுமி கருணாகரன், சங்கிதா விஜய், பகுதி கழக செயலாளர் A.K.கருணாகரன் மற்றும் வட்ட கழக செயலாளர்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.




No comments
Thank you for your comments