தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி வெளியீட்டு விழா
தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான நாட் குறிப்பு மற்றும் நாட்காட்டி வெளியீட்டு விழா 13.12.2022 அன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள ஹோட்டல் ராஜ் பேலஸில் நடைபெற்றது.
வருவாய்த்துறை அமைச்சர் K.K.S.S.R. இராமச்சந்திரன் அவர்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி நாட் குறிப்பினை வெளியிட்டார்கள். வருவாய்த்துறை அரசு முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் I. A.S அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி நாட்காட்டியினை வெளியிட்டார்கள்.
விழாவிற்கு சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் சுரேஷ் வரவேற்புரையாற்றினார். மாநில பொருளாளர் முத்து செல்வன் நன்றியுரையாற்றினார். மாநில துணைத் தலைவர் நல்லா கவுண்டன், மாநில செயலாளர்கள் விஸ்வநாதன், அரங்க. வீரபாண்டியன் முன்னிலை வகித்தனர்.
மாநில சங்க தேர்தல் ஆணையர் ராஜரத்தினம், மாநில சங்க ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் ஜீவரத்தினம், புஷ்பகாந்தன், குமார் மற்றும் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை சங்க தலைமை நிலைய செயலாளர்கள் தியாகராஜன், ரகுவரன் மற்றும் சென்னை மாவட்ட தலைவர் லெனின் ஆகியோர் செய்திருந்தனர்


No comments
Thank you for your comments