புரட்சி பாரதம் கட்சியின் 4- மாவட்டம் அடங்கிய ஆலோசனைக் கூட்டம்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்டம் அன்னை அஞ்சுகம் திருமண மண்டபத்தில் புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய நான்கு மாவட்ட ஒன்றிய, நகர, பகுதி கழக, மாவட்ட நிர்வாகிகளை அழைத்து கலந்து ஆய்வு கூட்டம் புரட்சி பாரத கட்சியின் தலைவர் ஜெகன்மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
மாநில பொருளாளர் எம் மாறன், மாநில துணைப் பொதுச் செயலாளர் பி காமராஜ், மாநில முதன்மைச் செயலாளர் ரூசேந்திரகுமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர்கள் வின்சென்ட் தளபதி செல்வம் மாவட்ட செயலாளர் பரணி மாரி, எஸ் பி சி தனசேகரன், டி கே சீனிவாசன் காஞ்சிபுரம் நிர்வாகிகள் கரோத்தே ராயப்பன், கூரம் செல்வம், அன்னக்கிளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கட்சியின் நிர்வாகத்தை சீரமைத்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்குள் முன் கட்சியை இன்னும் பலப்படுத்தி தேர்தல் வருவதற்கு பலப்படுத்த வேண்டும், உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் ஆலோசனைக் கூட்டம் எடுக்கப்பட்டது.
மேலும் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது அதற்குண்டான நிலங்களையும் கையகப்படுத்தியுள்ளதாகவும் அடிப்படை வேலைகளில் இறங்கி இருப்பதாக கேள்விப்பட்டேன் கிட்டத்தட்ட 6,7, கிராமங்கள் பரந்தூர், ஏகானாபுரம் போன்ற கிராமங்கள் எல்லாம் தொடர்ந்து மக்கள் போராட்டம் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
புரட்சி பாரதம் கட்சி சார்பாகவும் மக்களை சந்தித்து ஆறுதலாகவும் அவர்களிடத்தில் பேசி இருக்கிறோம், அரசாங்கத்திற்கு மக்களின் கருத்துக்களை கடிதம் மூலமாகவும், நேரடியாகவும் தெரிவித்ததோம். ஆனால் அரசாங்கம் என்னதான் போராட்டம் நடத்தினாலும் பரந்தூர் விமான நிலையம் வருவதை தடுக்க முடியாது என்பதனை அமைச்சர்கள் திட்டவட்டமாக தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.
எனவே மக்களிடம் ஏற்கனவே விவசாய நிலங்களின் மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது விமான நிலையம் வருகிறது என்கின்ற காரணத்தினால் பன்மடங்கு விலையை உயர்த்தி உள்ளதால் உயர்ந்த விலையை மக்களுக்கு தருவார்களா அல்லது நிலத்திற்கு உண்டான பழைய விலையை தருவார்களா என்ற குழப்பம் மக்களிடையே நிலவி வருகிறது.
மேலும் வேறு வழி இல்லாமல் விமான நிலையம் வருகிறது என்று சொன்னால் 7- கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்குமா என்கின்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் 13- கிராம மக்களின் வாழ்வாதாரம் அரசு கையில் தான் உள்ளது.ஆகவே விவசாயம் செய்யும் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க அரசு தான் வழிவகை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் மாண்டஸ் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் முழுமையாக நிவாரணம் அளித்ததாக தெரிவித்ததை பற்றி கேட்டதற்கு சென்னையில் ஒரு சில இடங்களை தவிர மற்ற இடங்களில் நீர் பிடிப்புகள் அதிகமாக இருந்ததாலும் வீட்டை விட்டு வெளியேறாத சூழ்நிலை இருந்ததன சாப்பிடுவது கூட வழியில்லாமல் இருந்த நிலையிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தான் அரசாங்கம் நிவாரண பணிகளை மேற்கொண்டது . ஒட்டுமொத்த மக்களுக்கும் சென்னையில் நிவாரணம் வழங்கவில்லை .
சென்னை மேயருக்கு மரியாதை அளிக்கப்படாததை பற்றி தெரிவிக்கையில் தாழ்த்தப்பட்ட மக்கள் இது போன்ற பல்வேறு பணிகளில் ஊராட்சி மன்ற தலைவராகவும், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்களாகவும், பேரூராட்சி தலைவராகவும், மாநகராட்சி மேயர்களாகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு உண்டான மரியாதை அளிப்பதில்லை என்றும் மேயர் உள்ளக்குமுரல் அவர்களுக்கு இருந்தாலும் அவற்றை வெளியில் சொல்லாத முடியாதவாறு சூழ்நிலை இருப்பதாக அவர் தெரிவித்தார்
ஆகவே புரட்சி பாரதம் கட்சி சார்பாக மரியாதை என்பது முக்கியம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உயர் பதவிகள் வழங்கப்படுவது மட்டுமல்லாமல் அவருக்கு உண்டான மரியாதைகள் அளிக்கப்பட வேண்டும் எனவும் செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.


No comments
Thank you for your comments