மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை பெற அடையாள அட்டையுடன் ஆதார் நகல் அவசியம்
காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.2000/- தொடர்ந்து பெற வேண்டுமாயின் மாற்றுத்திறனாளி அடையாள அட்டையுடன் ஆதார் நகல் அவசியம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி தகவல் தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அவர்களின் கடிதத்தின்படி மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி, கடுமையாக பாதிக்கபட்டவர், முதுகு தண்டுவடம் பாதிக்கபட்டடோர், தொழுநோயால் பாதிக்கபட்டவர் மற்றும் தசைசிதைவு நோயால் பாதிக்கபட்டவர்களுக்கு மாதம் ரூ.2000/- பராமரிப்பு உதவித்தொகை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் வழங்கபட்டுவருகிறது.
இந்த பராமரிப்பு உதவித்தொகை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் தொடர்ந்து பெற வேண்டுமாயின், உடனடியாக மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கி புத்தக நகல், புகைப்படம்-1 மனவளர்ச்சி குன்றியோரயிருப்பின் பெற்றோர்களுடன் இணைந்த புகைப்படம்-1 தனித்துவம் வாய்ந்த, தேசிய அடையாள அட்டை (UDID) பெற்றிருப்பின் அதன் நகல் ஆகிய குறிப்பிட்டுள்ள அனைத்து நகல்களும் இணைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், தரை தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு நேரிலோ அலலது தபால் மூலமாகவோ 06.01.2023-க்குள் சமர்பிக்க வேண்டும் மேலும் விவரங்களுக்கு மேற்கண்ட அலுவலகத்தினை (அலுவலக தொலைபேசி எண்:-044-29998040), என்ற எண்ணிற்கு அணுகுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments