காஞ்சிபுரம் தேவராஜசுவாமி திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா
காஞ்சிபுரம், டிச.8:
காஞ்சிபுரம் தேவராஜசுவாமி திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி வியாழக்கிழமை சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வும், பெருமாள் வீதியுலாவும் நடைபெற்றது.
![]() |
| திருக்கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி ஸ்ரீதேவி, பூதேவியருடன் மாடவீதிகளில் வீதியுலா வந்த உற்சவர் தேவராஜசுவாமி |
அத்திவரதர் புகழ்பெற்ற காஞ்சிபுரம் தேவராஜசுவாமி திருக்கோயிலில் திருக்கார்த்திகையையொட்டி ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவர் தேவராஜசுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெருமாள் வீதியுலா புறப்பட்டதும் ஆலயத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த 15 அடி உயர சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் பெருமாள் தேசிகன் சந்நிதிக்கு எழுந்தருளி தீபாராதனைகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது. விழாவில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரா.வான்மதி, கோயில் செயல் அலுவலர் ந.தியாகராஜன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments