சமுதாய நல்லிணக்க செயல் புரிந்தவர்கள் கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம்
தமிழக அரசின் 2022 ஆம் ஆண்டிற்கான கபீர் புரஸ்கார் விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
2022 - ஆம் ஆண்டிற்கான கபீர் புரஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சர் அவர்களால் குடியரசு தின விழாவின் போது வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த செய்தியினை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் .மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவிக்கையில்,
இவ்விருதானது தலா ரூ.20000/- ரூ.10000/- மற்றும் ரூ.5000/- தகுதியுடையோர்க்கு வழங்கப்படுகிறது.
சென்னை மாவட்டத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் (ஆயுதப்படை வீரர்கள், காவல் தீயணைப்புத் துறை மற்றும் அரசுப் பணியாளர்கள் ஆகியோர்கள் நீங்கலாக) சமுதாய நல்லிணக்க செயல் ஆற்றும் அரசுப் பணியாளர்கள் சமுதாய நல்லிணக்க செயல் ஆற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில் இப்பதக்கத்தைப் பெறத் தகுதியுடையவராவர்.
நம் உயிர் மூச்சு..... முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு
மேலும் இவ்விருதானது ஒரு சாதி, இனம் வகுப்பைச் சார்ந்தவர்கள் பிற சாதி, இன வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிவி க்கையில் அவரது உடல் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.
மேற்காணும் விருதிற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு ஆணைய இணையதள முகவரியான htpp://awards.tn.gov.in மற்றும் www.sdat.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை பெற்று தலைமையகம் அனுப்பிட வேண்டியுள்ளதால், விண்ணப்பங்களை 12.12.2022 ஆம் தேதிக்குள் காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவகத்தில் மாலை 5.30 மணிக்குள் சமர்பித்திட வேண்டுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments
Thank you for your comments