விருத்தச்சலம் 21 வது வார்டு பகுதிக்கு அம்பேத்கர் பெயரை வைக்க இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட 21 வது வார்டு பகுதியில் உள்ள திருமலை திருச்சனூர் திருமண மண்டபம் உள்ள பகுதிக்கு பழைய பெயரான அம்பேத்கர் பெயரை வைக்கக் கோரியும் அப்பகுதியில் அம்பேத்கர் தெரு என்று பெயர் பலகை வைக்க வலியுறுத்தினார்கள்.
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து விருத்தாச்சலம் நகராட்சி அலுவலகம் முன்பு இந்திய குடியரசு கட்சியின் மாநில இணை பொதுச் செயலாளர் க.மங்காபிள்ளை தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அம்பேத்கர் பெயரில் பெயர் பலகை எழுதி வைக்க கோரி முழக்கங்கள் எழுப்பினர் அதன் பின்பு, நகராட்சி ஆணையாளரிடம் சென்று முறையிட்டு,இந்திய குடியரசு கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர்.

No comments
Thank you for your comments